Skip to main content

MEPZ Special Economic Zone

Tamil Nadu Andaman & Nicobar Islands and Pondicherry (SEZs & HEOUs)
Office of Zonal Development Commissioner
news background

Press Release Details

மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகஸ்ட் மாதம் ரூ. 443 கோடிக்கு மேல் முதலீடு செய்ய ஒப்புதல்

               

August 10, 2026


மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் ஒப்புதல் குழு மண்டல வளர்ச்சி ஆணையர் திரு. அலெக்ஸ் பால் மேனன் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பதினொரு குறிப்பிடத்தக்க முதலீட்டு முன் மொழிவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி பிராந்தியத்தின் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கான முதன்மையான இடமாக உள்ளது. 9 புதிய சிறப்புப் பொருளாதார மண்டலப் பிரிவுகள், 2 ஏற்றுமதி சார்ந்த பிரிவுகளை உள்ளடக்கிய இந்த ஒப்புதல்கள், ரூ 443.11 கோடி முதலீடுகள் மூலம், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், சரக்குப் போக்குவரத்து சேவைகள் உட்பட பல்வேறு தொழில் துறைகளில், 2,427 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



முக்கிய ஒப்புதல்கள்:
* இசட்எஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி கோயம்புத்தூர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் ஆஸ்பென் பார்க் இன்ஃப்ரா கோயம்புத்தூரில் உற்பத்திக்கான வசதியை நிறுவுகிறது, இது ரூ 336.13 கோடி முதலீட்டில் 250 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், மேம்பட்ட உற்பத்தியில் மண்டல அளவிலான திறன்களை வலுப்படுத்தும்.
* சான்மினா- எஸ்சிஐ இந்தியா என்ற தனியார் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் உள்ள சிப்காட் ஹைடெக் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உற்பத்தி அலகு ஒன்றை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ரூ 72.72 கோடி முதலீட்டில், 1,350 வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இப்பகுதியில் உற்பத்தி சூழலை மேலும் ஒருங்கிணைக்கவும் உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* விசின்ட் சிஸ்டம்ஸ் தனியார் நிறுவனம், கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் உள்ள எல்காட் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்த உள்ளது. மேலும் ரூ 11.31 கோடி முதலீட்டில் சேவை சார்ந்த துறையில் 294 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.



இந்த ஒப்புதல்களின் ஒட்டுமொத்த விளைவு, ஒருங்கிணைந்த தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் திறன் கொண்ட பல்துறை மையமாக இப்பகுதியை நிலைநிறுத்துகிறது. இந்த திட்டங்கள் கணிசமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தயார் நிலையில் உள்ளன, அதே நேரத்தில் கீழ்நிலை பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது, ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு நம்பகமான இடமாக இந்த மண்டலத்தில் நிலையை வலுப்படுத்துகிறது.

***

Popular News